புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 108வது பிறந்தநாள் விழா : போளூர் தொகுதியின் லிட்டில் எம் ஜி ஆர் இரா.சுகுமார் அவர்கள் புரட்சித் தலைவர் சாதனைகள் விளக்கம்

கிருபாகரன் 8 months ago

திருவண்ணாமலை : அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் டாக்டர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் 108வது பிறந்தநாள் விழா.போளூர் தொகுதி லிட்டில் எம் ஜி ஆர் இரா.சுகுமார் அவர்கள் புரட்சித் தலைவர் அவர்களின் சாதனை பற்றி விளக்கம்.திட்டங்கள் சத்துணவுத் திட்டம் விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி மகளிருக்கு சேவை நிலையங்கள் பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள் தாய் சேய் நல இல்லங்கள் இலவச சீருடை வழங்குதல் திட்டம் இலவச காலணி வழங்குதல் திட்டம் இலவச பற்பொடி வழங்குதல் திட்டம் இலவச பாடநூல் வழங்குதல் திட்டம் வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.தமிழ் பல்கலைக் கழகம் நிறுவுதல்1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார் எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த ம. கோ. இரா. முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13 சூன், 1981 இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது.1981 ஆகத்து 1 ஆம் நாள் தமிழக ஆளுநர் மூலம் “தமிழ்ப் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981” பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது.இதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 972.7 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் தலைமையினான அரசு கையகப்படுத்தி ஒதுக்கியது.தமிழ் ஈழம் குறித்த நிலைப்பாடு இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்