ஹரிஹரசுதன் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பாக 12 ஆம் ஆண்டு அலங்கார திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது : ஈரோடு ஐயப்ப பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
ஆறுமுகம்
9 months ago

ஈரோடு: ஹரிஹரசுதன் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பாக 12 ஆம் ஆண்டு அலங்கார திருவிளக்கு வீதி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
குருசாமி கடுக்கன் வெற்றிவேல், சுந்தரம், முருகன், தமிழ் ஆகியோர் தலைமையில் விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
திருவிளக்கு வீதி உலா ஈரோடு வ உ சி பூங்காவில் தொடங்கி வழியாக கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் வந்தடைந்தது இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.
முடிவில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.