தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வெ.ரா.இளங்கோவன் அவர்கள் இயற்கை எய்தினார் : தமிழக மக்கள் கழகம் தலைவர் காகனம் மு.சீனிவாசன் அவர்கள் இரங்கல் தெரிவித்தார்

Logesh 10 months ago

 சென்னைகாங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (76) சென்னையில் சனிக்கிழமை காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலை 10.20 மணிக்கு உயிரிழந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு செய்தி அறிந்ததும் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை மற்றும் கட்சி நிர்வாகிகள் மியாட் மருத்துவமனைக்கு விரைந்தனர். கட்சித் தொண்டர்களும், மக்களும் திரண்டனர். இளங்கோவன் மறைவு செய்தியறிந்து தொண்டர்கள் மிகுந்த வேதனையடைந்தனர் தமிழக மக்கள் கழகம் தலைவர் காகனம் மு.சீனிவாசன் இரங்கல் தெரிவித்தார் 


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்