காவேரி ஆற்றோரம் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்க அரசு விரைவில் தொடக்கம்..ஆயக்காட்டூர் மக்கள் கடும் எதிர்ப்பு

Logesh 10 months ago

காவேரி ஆற்றோரம் வசிக்கும் மக்களுக்கு ஆயக்காட்டூர் ஒரு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நிலத்தை மீட்டனர். பள்ளிபாளையம் காவிரி ஆற்றோரும் வசிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு ஆயக்காட்டூர் ஒரு பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது இந்த இடத்தில் நகர் புற மேம்பாட்டு வாரியம் மூலம் 520 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட உள்ளன.இந்த இடத்தை கடந்த மாதம் 13ல்அதிகாரிகள் ஆய்வு செய்து சர்வே செய்ய வந்தனர் இதற்கு ஆயக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துனர்.இதனால் அதிகாரிகள் திரும்பினர் இந்நிலையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் வந்த அதிகாரிகள் 3 பொக்லைன் இயந்திரம் மூலம் முட்புதர்களை அகற்றி இடத்தை மீட்டனர்.இதனால் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து அப்பகுதியில் சேர்ந்த விஸ்வநாதன் கூறியதாவது ஆயக்காட்டூர் பகுதியில் உள்ள இந்த இடத்தை 48 குடும்பங்கள் 70 ஆண்டாக அனுபவத்தை வைத்திருக்கிறோம்.இந்த இட பிரச்சனை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நேற்று அதிகாரிகள் இடத்தை மீட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்