நற்பணி நாயகன் அமரர் அறிவொளி சரவணன் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் செய்தல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது

சுப்பிரமணியன் 10 months ago

நாமக்கல் :  குமாரபாளையம் நற்பணி நாயகன் அமரர் அறிவொளி சரவணன்  மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் செய்த 17 நபர்களுக்கும் விடியல் ஆரம்பம் அறக்கட்டளையின் தலைவர் விடியல் பிரகாஷ்  சார்பாக பவானி அசோக் கிருஷ்ணா மருத்துவமனையின்  மருத்துவர் நடராஜ் அவர்கள் மற்றும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பாரதி விஜயகுமார்  கலந்து கொண்டு  உடல் தானம் செய்த அனைவருக்கும் பரிவட்டம் கட்டி, சான்றிதழ் வழங்கி  பொன்னாடை போர்த்தி பாராட்டு விழா நடத்தப்பட்டது.இனிய விழாவில் காமராஜ் தியாகி சீனிவாசன் அறக்கட்டளை  தலைவர், சிறப்பு விருந்தினராக கோவையிலிருந்து வருகை புரிந்த பால்ராஜ், முபாரக்,  பஞ்சாலை சண்முகம், கோபாலகிருஷ்ணன், நில முகவர் சங்க தலைவர் சின்னசாமி, சுருதி ஆர்கெஸ்ட்ரா அமைப்பாளர் சிவசுப்பிரமணியன், பரமன் பாண்டியன், சுஜாதா, சம்பத், பாசம் குமார், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்