உலக சமாதான மகரிஷி சேவா அறக்கட்டளை மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் மற்றும் கல்வி மையத்தின் சார்பாகஏழுமலையான் ஜோதிட திருவிழாகாமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர ஸ்வாமிகள் மற்றும் யதார்த்த ஜோதிடர் செல்வி தாமு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுப்பிரமணியன் 10 months ago

உலக சமாதான மகரிஷி சேவா அறக்கட்டளை மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் மற்றும் கல்வி மையத்தின் சார்பாக பள்ளிபாளையத்தில் கொங்கு வெள்ளாளர் திருமண மண்டபத்தில் ஏழுமலையான் ஜோதிட திருவிழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது .இந்த விழாவிற்கு கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர ஸ்வாமிகள் மற்றும் யதார்த்த ஜோதிடர் செல்வி தாமு தலைமை தாங்கினார்கள். இவ்விழாவிற்கு தமிழகத்தில் மற்றும் பல மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் இரண்டு நாட்கள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் பல ஜோதிட ஜாம்பவான்கள் ஆசான்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். முறையாக பயிற்சி பெற்ற ஜோதிட மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் ஜோதிடர்களுக்கு தகுதி நிலை சான்றிதழ் வழங்கப்பட்டது.மற்றும் ஆன்மீகம் சேவை, மக்கள் சேவை ஜோதிடம் என மூன்றையும் தொடர்ந்து சேவை செய்தவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது   வழங்கப்பட்டது.தொடர் ஜோதிட சேவையை பாராட்டி டாக்டர் பி.எ.முகுந்தன் முரளி  ஜோதிட கலைக் காவலர் என்று விருதை கோவை காமாட்சிபுரி ஆதீனம் சார்பாக வழங்கப்பட்டது.விழாவின் ஒருங்கிணைப்பாளராக லோகநாதன் மற்றும் மணி முருகேசன்  சிறப்பான பணியை செய்தார்கள் . இந்த விழாவிற்கு மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர்பி.எ.முகுந்தன் முரளி  சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்