தமிழ்நாடு அரசைக் கண்டித்து ம.தி.மு.க சா.ம.ந கட்சி.மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து பள்ளிப் பாளையத்தில் தொடர் முழுக்க போராட்டம்

ஆறுமுகம் 10 months ago

திமுக அரசை கண்டித்து மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!சட்ட விரோதமாக தொடர்ந்து சாயக் கழிவுகளை வெளியேற்றும் சாய ஆலைகள் மீது  நடவடிக்கை எடுக்காத மாசு கட்டுப்பாட்டு வாரியத்தையும் அதை கண்டுகொள்ளாத தமிழக அரசையும் கண்டித்து கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்.நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஈஆர் தியேட்டர் ரோடு, புதுக்காடு, பெரியார் நகர், காவிரி ஆர் எஸ் ரோடு ஆகிய பகுதியில் செயல்படும் 20-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் சாயநீரை சுத்திகரிப்பு செய்யாமல் கால்வாயில் திறந்து விடுவதால் நிலத்தடி நீர் மற்றும் காவிரி ஆறு மாசடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து  திருச்சங்கோடு கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில் சாயப்பட்டறை உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தி சாயத்த தண்ணீரை  சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக வெளியேற்றினால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.ஆனாலும் அப்பகுதி உள்ள சாய ஆலை நிறுவனங்கள் மேலும் சாய தண்ணீரை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே கால்வாய் வழியாக ஆற்றில் கலந்து விடுகின்றனர் .இதனைக் கண்டித்து திமுக கூட்டணியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில்  திருச்செங்கோடு சாலையில் 100க்கும் மேற்பட்டவர்களுடன்  கொட்டும் மழையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தையும், தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் சாய ஆலைகளை மூடக்கோரியும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விடியா அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திமுக கூட்டணியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்