எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்று கேட்டாலே தலை சுற்றுகிறது: ஓ.பன்னீர்செல்வம் சாடல்

LOGI 1 year ago

சென்னை: எடப்பாடி பிரதமர் ஆகவும் சான்ஸ் இருக்கு என சொன்ன அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஓபிஎஸ் அளித்த பதிலை பார்க்கலாம். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியே கூட இந்திய பிரதமராக வர வாய்ப்பு இருப்பதாக கூறினார். மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவை என 40க்கு 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றும், யார் பிரதமர் என்பதை எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யும் வகையில் பெரும் வெற்றியை கொடுக்க வேண்டும். சூழ்நிலை வந்தால் எடப்பாடி பழனிசாமியே கூட இந்திய பிரதமராக வர வாய்ப்பு உள்ளது" என்று பேசினார். ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு குறித்து அண்ணாமலையிடம் கேட்ட போது, ராஜேந்திர பாலாஜி கூறியதற்கு சிரிப்புதான் என் பதில்" என்றார். பின்னர் இது குறித்தும் பேசிய ராஜேந்திர பாலாஜி தனது கருத்தை எல்லோரும் ஜோக் அடிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி பிரதமராக எப்படி வாய்ப்பு உள்ளது என்றும் பேசியிருக்கிறார். இது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி கூறும் போது, எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூட்டணியில் விரல் காட்டுபவர்கள் பிரதமராக வர வேண்டும். அல்லது எடப்பாடி பழனிசாமியே பிரதமராக வர வேண்டும். நான் இதை சொன்னவுடன் சில பேர் நக்கல், ஜோக் என்று சொல்கிறார்கள்.. கர்நாடகாவின் தேவகவுடா பிரதமராக வரவில்லையா?, 10 எம்பிக்களை வைத்திருந்தவர்கள், ஒரு எம்பியை வைத்தவர்கள் கூட பிரதமராக வந்திருக்கிறார்கள். ஒரு எம்பியை வைத்திருக்கிறவர்கள் கூட பிரதமராக வரும்போது, 2 கோடி உறுப்பினர்களை வைத்திருக்கின்ற அதிமுக பொதுச்செயலாளர் ஏன் வர முடியாது" என்றார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஓ பன்னீர் செல்வம், "இதெல்லாம் கேட்க கேட்க.. எங்களுக்கு எல்லாம் தலையே சுத்துகிறது" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்