புரட்சித்தாய் சின்னமா அவர்கள், சென்னை கீழ்பாக்கம் ஹால்ஸ் சாலையில் உள்ள கருணை இல்லத்தில் ஆதரவற்ற முதியவர்களோடு இணைந்து கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாடினார்கள்.

LOGESH 1 year ago

புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள். சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலையில் உள்ள கருணை இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த குழந்தை இயேசு குடில் முன்பாக, ஆதரவற்ற முதியவர்களோடு இணைந்து கிறிஸ்துமஸ் விழாவினைக் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். அதன்பிறகு, புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள், அங்கு தங்கியுள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு கேக், உணவு மற்றும் புத்தாடைகள் வழங்கினார்கள். மேலும் ஆதரவற்ற முதியவர்கள் அனைவரையும் அவர்கள் தங்கியிருக்கும் அறைகளுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். பிள்னர் அதே வளாகத்தில் அமைந்துள்ள நேர்ச்சை திருத்தலத்திற்கு சென்று ஆண்டவர் இயேசுபிரானை வணங்கி பிரார்த்தனை மேற்கொண்டார்.


அறிக்கைகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்