புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் பெண்களை இழிவாக பேசிய அமைச்சர்களுக்கு கடும் கண்டனம்

LOGESH 1 year ago

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பும் இருந்ததில்லை; மரியாதையும் கிடைப்பதில்லை என்பதை திமுகவினரே நிரூபிக்கிறார்கள். சமீபத்தில் திமுக அமைச்சர்கள் வாய்க்கு வந்தப்படி பெண்களை இழிவுபடுத்தி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. திமுக அமைச்சர் ரூ.4000மக்களுக்கு கொடுத்ததாக சொல்கிறார்; முதலில் யார் இவர்களிடம் கேட்டார் என தெரியவில்லை. மக்களை ஏமாற்றி எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல பொய் வாக்குறுதிகளை கொடுத்தனர். பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என்று அறிவித்துவிட்டு பெயரளவில் ஒரு சில பேருந்துகளை மட்டும் இயக்குகின்றனர்.  அம்மா ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு பயன் தரும் விலையில்லா வேஷ்டி, அரிசி, ஆடு, மாடு, மிதிவண்டி, மின்விசிறி போன்ற எண்ணற்ற திட்டங்களை தந்தார். ஆனால் எந்த ஒரு திட்டத்திற்கும் 'இலவசம்' என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது; அதற்கு மாறாக விலையில்லா என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று நடைமுறைப்படுத்தினார்கள். திமுகவினரும் பெண்ணின் வயிற்றில் இருந்து தான் பிறந்துள்ளார்கள்; இனிமேலாவது பொது இடங்களில் பேசும்போது பெண்களுக்கு உரிய மதிப்பளித்து பேச வேண்டும்.


அறிக்கைகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்