பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது குரு பூஜையில் கலந்து கொள்ளும் அ.இ.அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள்:எல்லாபுரம் ரஜினி

LOGI 1 year ago

 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1939-ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற 52-ஆவது வருடாந்திர காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை எதிர்த்துப் பட்டாபி சீதாராமையா போட்டியிட்டார் சீதாராமையா காந்தியடிகளில் ஆதரவு பெற்றவராவார். ஆனாலும் போஸ் அவர்கள் தேவரின் ஆதரவோடு காங்கிரசின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார். தேவர் தென்னிந்தியாவின் வாக்குகளை, போஸூக்கு ஆதரவாகத் திரட்டினார். பின்னர்க் காந்தியின் தலையீட்டினால் போஸ் அந்தப் பொறுப்பை விட்டு விலகி, ஜூன் 22-ஆம் நாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார். காங்கிரஸ் கட்சியின் மீதான கருத்து வேறுபாட்டாலும் குற்றபரம்பரை சட்டத்தின் மீதான காங்கிரசின் நிலைப்பாட்டின் காரணத்தினாலும் தேவர், போசுடன் இணைந்தார். பின்னாளில் செப்டம்பர் 6-ஆம் நாள் போஸ் மதுரைக்கு வந்திருந்த பொழுது, தேவர் அவர்கள், போஸை வரவேற்கும் விதமாக மிகப்பெரிய கூட்டத்தினைக் கூட்டினார்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்