பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது குரு பூஜையில் கலந்து கொள்ளும் அ.இ.அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள்:முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நரசிம்மன்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1937-ஆம் ஆண்டு நடந்த மதராஸ் மாகாண தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் தேவர் அவர்கள் இளைஞர்களைக் காங்கிரஸ் கட்சிக்கு உழைத்திடும்படி செயல்வீரர்களாகத் திரட்டினார். தேவரின் இந்தச் செயல்கள் நீதிகட்சியினருக்குப் பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் அந்த அரசாங்கம் தேவரை இராமநாதபுரத்திற்கு வெளியே பயணித்துப் பிரசாரம் செய்ய முடியாதபடிக்குச் சட்டங்களும் கட்டுபாடுகளும் விதித்தது. 1937-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியைக் கண்டு பயந்துபோன ஆங்கிலேய நீதி கட்சியரசு, பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர், அந்தத் தேர்தலில் மன்னரை எதிர்த்து மாபெரும் வெற்றிபெற்றார். பின் வந்த தேர்தல்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி மாகாணத்தினை ஆளும் கட்சியாக உருபெற்றது. இந்தக் காங்கிரஸ் கட்சி அரசு, குற்ற பரம்பரை சட்டத்தினை விலக்கும் என்று தேவர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அப்போதைய புது அரசின் முதல்வரான ராஜகோபாலாச்சாரி அவர்கள் அந்தச் சட்டத்தினை நீக்கவில்லை.