பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது குரு பூஜையில் கலந்து கொள்ளும் அ.இ.அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள்:டாக்டர்.அருள்பதி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1952-ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன், பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. லோக் சபா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடந்தன. இதில் தேவர், அருப்புகோட்டை லோக்சபா தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றியும் பெற்றார். இதில் தேவர் அவர்கள் லோக்சபா பதவியைத் துறந்து, சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்று, மதராஸ் சட்டமன்ற உறுப்பினர் குழுவில் இடம்பெற்றார். இந்தத் தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் மதராஸ் சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்தது. மேலும் தேவர் கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து, காங்கிரஸ் அல்லாத ஆட்சியை நிறுவ முனைந்தார்.