அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் உழவர் திருநாள் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது
Logesh
8 months ago

சேலம் : அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சேலம் புறநகர் மாவட்ட சார்பில் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புத்தூர் பகுதியில் பிரம்மண்டமான பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டார். இப் பொங்கல் விழாவிற்காக பத்தாயிரம் கரும்புகளைக் கொண்டு விழா திடல் மற்றும் மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. புத்தூர் பகுதியை சேர்ந்த பெண்கள் 108 பானைகளில் பொங்கல் வைத்தனர். முன்னதாக பொங்கலுக்கான உலை கொதித்த நிலையில், அதில் பச்சரிசியை இட்டு பொங்கல் வைக்கும் நிகழ்வை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.