தமிழ்நாடு அரசின் வன சட்ட திருத்த வரைவைத் திரும்பப்பெற வேண்டும்’ என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

Logesh 9 months ago

சென்னை : தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கை:ஜன.9-ம் தேதியன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சட்டத்தில் வேளாண் உற்பத்தியை, மனித உயிர்களைப் பறிக்கும் காட்டுப் பன்றிகளை தடுப்பதற்காக திருத்தங்கள் செய்து அறிவிக்கப்பட்டுள்ளன. 20 ஆண்டு காலத்துக்கும் மேலாக விவசாயிகளும் அப்பாவி மக்களும் அடைந்து வருகிற இழப்புக்கும், துன்பத்துக்கும் இந்த திருத்தங்கள் பயனளிக்காது.வன பாதுகாப்பு எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் பன்றிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை தடுக்க முடியாது என்றால், அங்கு ஏற்படும் இழப்புக்கு ஈடு என்ன என்பதை அரசு சொல்ல வேண்டும். வன விலங்குகளுக்கு வனம்தான் புகலிடம். வனத்தை வேறு வகை பயன்பாட்டுக்காக அழித்துவிட்டு சமவெளிப் பகுதிகளை கூடுதலாக சேர்த்து வன வளையத்துக்குள் கொண்டு வருவது என்ன நியாயம்?வன எல்லைக்கப்பால் 3 கி.மீ. தூரத்துக்குள் வரும் காட்டு பன்றிகளை வனத்துறையிடம் முறையிட்டால் அவைகளை திரும்ப காடுகளில் கொண்டுபோய் விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வனத்துறையில் போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில்.. ஆக்ரோஷமாக வரும் பன்றிகளை பிடித்துக் கொண்டு போய் காட்டில் விடுவதற்கான பயிற்சியும் போதுமான ஊழியர்களும் இல்லாதபோது இது எப்படி சாத்தியம் ஆகும். அதுவரை பன்றிகளால் பாதிக்கப்படுகிற வேளாண் பயிர்களுக்கு என்ன இழப்பீடு வழங்கப்படும்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்