அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அனைவருக்கும் தைத்திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Logesh 9 months ago

சென்னை : அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தமிழர்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடும் இந்த பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையானது விவசாயத்திற்கு உதவிய சூரியன், ஆடு, மாடு போன்றவற்றிற்கு நன்றி செலுத்தும்விதமாக கொண்டாடப்படுகிறது விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற அதிமுக ஆட்சிக் காலங்களில், எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதோடு நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு, விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்ததை பெருமையோடு நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். மக்கள் அனைவரும் குன்றா நலமும், குறையா வளமும், மங்கா புகழும், மாசிலா செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.தைப் பிறந்தால் வழி பிறக்கும் தடைகள் தகரும் நிலைகள் உயரும் அன்புப் பொங்க இன்பம் பொங்க இனிமைப் பொங்க மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உலக எங்கும் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தைத்திருநாள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்