கலசப்பாக்கம் தொகுதி மக்களின் செல்லப்பிள்ளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் அ.தி.மு.கவின் கழக தொண்டர்கள் 1500 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது

Logesh 9 months ago

திருவண்ணாமலை : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தைத்திருநாள் மற்றும் பொங்கல் விழா முன்னிட்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் புரட்சித்தமிழன் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் அறிவுறுத்தல் படி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு வி. பன்னீர்செல்வம் எம். எல் ஏ அவர்கள் கலசபாக்கத்தில் உள்ள பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் கலசபாக்கம் தொகுதியில் உள்ள அனைத்து கழக தொண்டர்களுக்கு 1500 நபருக்கு சுவர் கடிகாரம் வேஸ்ட்  சட்டை , குக்கர் , கரும்பு போன்றவை அனைத்து நபர்களுக்கும் கருணை உள்ளத்தோடு வழங்கினார் உடன் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநில, மாவட்ட , ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் 


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்