அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்பாட்டம் - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பு

தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு :சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்துஅனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்றுவிடப்போவதில்லை. தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். பெற்றோர்களே- பெற்றோர்களே- இந்த தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது. நம் பிள்ளைகளை நாம் தான் பார்த்துக் கொள்ளவேண்டும். கவனமாக இருங்கள். மாணவச் செல்வங்களே, இளைய சமுதாயமே- உங்கள் எதிர்காலம் மிக முக்கியம். ஒரு சிறிய தவறு கூட பெரிய தண்டனைகளை பெற்றுத் தந்துவிடும். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிண்டப் பூஜை செய்ய கூட கோவில் நிர்வாகத்திற்கு பணம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். நம் முன்னோர்களுக்கு நாம் காட்டும் பாசத்தின், மரியாதையின் வெளிப்பாடாக, மரித்தவர்களின் மறுமை வாழ்வுக்காக இறைவனை வேண்டி வைக்கப்படும் பிண்டத்திலும் பணம் பார்க்க வேண்டும் என்ற கார்ப்பரேட் மனப்பான்மை மூலம் இந்த விடியா தி.மு.க. அரசு ஒரு மிகத் தவறான முன்னுதாரணத்தை விதைப்பது எந்தவகையிலும் ஏற்புடையது அல்ல. எனவே, இந்த முறையற்ற உத்தரவை உடனே திரும்பப் பெற்று, இறைவனுக்கான சேவையை முறைப்படுத்தவும், ஆலய மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான கட்டணங்களைத் தவிர வேறெந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என்று இந்த விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.