திண்டுக்கல் இஎஸ்ஐ மருத்துவமனையில் முறைகேடு?: காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி
LOGI
1 year ago

திண்டுக்கல்: திண்டுக்கல் இஎஸ்ஐ மருத்துவமனையில் அதிமுக ஆட்சியில் ரூ.16 கோடிக்கு மருந்துகள் கூடுதலாக வாங்கப்பட்டுள்ளது. 2016-17ம் ஆண்டு ரூ.16 கோடிக்கு அதிகமாக மருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டியளித்தார். மருந்து வாங்கிய சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ரூ.16 கோடி மருந்து வாங்கியதற்கு கணக்கு கட்டப்படவில்லை, முறைகேடு நடந்துள்ளதா என விசாரணை நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.