அ.இ .அ .தி.மு.க பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் பங்காரு அடிகளாரின் உடலுக்கு நேரில் அஞ்சலி

செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளதால் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில், மறைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு சின்னம்மா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின் பங்காரு அடிகளாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவர்களுடன் கழக நிர்வாகிகள் முன்னாள் தலைமை அரசு கொறடா நரசிம்மன்,முன்னாள் அமைச்சர் ஆனந்தன்,எல்லாபுரம் ரஜினி,பூவை கந்தன், டாக்டர் முருகேசன் மேடவாக்கம் காளிதாஸ் ,ஏழுமலை,நாமக்கல் ஆறுமுகம்,டாக்டர் அருள்பதி மற்றும் தமிழ்வேந்தன் கலந்துகொண்டனர்.