பள்ளிப்பாளையம் உள்ள வீட்டில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்..!

பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்..!நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் வசித்து வருபவர் ஜெயராமன் (73) இவரது மனைவி கலாவதி(64)இந்த தம்பதிகளுக்கு பிரவீன் என்ற மகன் உள்ளார் அவருக்கும் திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகிறார்.கடந்த அஞ்சு வருடமாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையிலே இருந்துள்ள கலாவதி கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து வீட்டில் தனியாக வசித்து வந்த ஜெயராமனுக்கு அவருக்கு உதவியாக அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பின் ஒருவர் வீட்டு வேலைகளை கவனித்து வந்தார்.சம்பவத்தன்று ஜெயராமன் சொந்த வேலையின் காரணமாக வெளியே சென்ற நிலையில் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு இறந்த கலாவதியின் புகைப்படத்திற்கு விளக்கேற்றி விட்டு லட்சுமி தனது வீட்டிற்கு சென்று உள்ளார்.இந்நிலையில் திடீரென ஜெயராமன் வீட்டிலிருந்து அதிக அளவு புகை வரவே இதனை அருகில் குடியிருப்பில் உள்ள பொதுமக்கள் பார்த்து வெளியே சென்ற ஜெயராமனுக்கு தகவல் தந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த ஜெயராமன் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதை உணர்ந்து உடனடியாக தீயணைப்புத்துறை, மின்சாரத்துறைக்கு தகவல் அளித்தார் அதற்குள் வீட்டினில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது மேலும் தீயினால் கரும் புகை மண்டலமாக அப்பகுதி முழுவதும் காட்சியளித்தது , உடனடியாக அங்கு வந்த மின்சாரத்துறை ஊழியர்கள் அப்பகுதியில் துரிதமாக செயல்பட்டு மின் இணைப்பைத் துண்டித்தனர்.தகவலின் பெயரில் வெப்படை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடினர்,ஒரு கட்டத்தில் தீயணைப்பு நிலைய வாகனத்தில் தண்ணீர் தீர்ந்து விட அருகில் இருந்து ஒரு லாரி தண்ணீர் கொண்டு சுமார் 3-மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்தனர்.இந்த தீ விபத்து குறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் வீட்டின் உள்ளே இருந்த தேக்கினால் செய்யப்பட்ட பர்னிச்சர் பொருட்கள் மற்றும் நான்கு ஏசிகள், குளிர்சாதன பெட்டி என 50 லட்ச ரூபாய் வரை உள்ள பொருள்கள் தீயில் கருகி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.இந்த தீ விபத்து சம்பத்தினால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.