தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழிச் சட்ட வாரத்தினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்தார்

Admin 9 months ago

ஈரோடு : மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழிச் சட்ட வாரத்தினை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்தார்.தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளினை நினைவு கூரும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 18.12.2024 முதல் 27.12.2024 வரை ஆட்சிமொழிச் சட்ட வார விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு, ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு, அரசாணைகள், ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைவு நடவடிக்கைகளும் மொழிப்பயிற்சி, மொழிப்பெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும்கணினித் தமிழ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் (ம) கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடு, ஆட்சிமொழிப் பட்டிமன்றம், தொழிலாளர் துறை (ம) வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்திட வலியுத்தி கலந்தாய்வுக் கூட்டம், ஆட்சி மொழித் திட்ட விளக்கக் கூட்டம் ஆகியவை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் அரசுப் பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி சம்பத்நகர். நவீன நூலகத்தில் முடிவடைந்தது.இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (மு.கூ.பொ) பெ.இளங்கோ உட்பட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்