பள்ளிபாளையம் நகராட்சி எல்லை விரிவாக்கம் செய்ய முடிவு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

நாமக்கல் : தமிழ்நாடு அரசு பள்ளிப் பாளையம் நகராட்சி மற்றும் ஊராட்சிகளை இனணக்க அரசு முடிவு. பள்ளிபாளையம் நகராட்சி உடன் ஐந்து ஊராட்சிகளை இணைத்து எல்லையை விரிவாக்கம் செய்வதற்கான உத்தேச முடிவினை அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஊராட்சி அமைப்புகளுக்கான விரிவாக்கம் செய்து மக்களின் அடிப்படை வசதிகளை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு எல்லை சீரமைப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி பள்ளிபாளையம் நகர ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தட்டாங் குட்டை, எலந்த கொட்டை, காடசநல்லூர், பள்ளிபாளையம் அக்ரஹாரம் , சமய சங்கிலி அக்ரஹாரம் ஆகிய 5 ஊராட்சிகளை பள்ளிபாளையம் நகராட்சி உடன் இணைக்க உத்தேச முடிவு அறிவிக்கப்பட்டது. அதேபோல பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய யத்தில் உள்ள பள்ளக்கா பாளையம் ஊராட்சியின் 1 முதல் 10 வரை உள்ள வார்டுகளை குமராபாளையம் நகராட்சியுடன் இணைக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புதுப்பாளையம் அக்ரஹாரம், ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஆகிய ஊராட்சிகளை ஆலம்பாளையம் பேரூராட்சி உடன் இணைத்து விரிவாக்கம் செய்ய அரசு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள் உள்ளன. இதில் தற்போது பள்ளிபாளையம் நகராட்சியுடன் பள்ளிபாளையம் அக்ரஹாரம் , சமய சங்கிலி, எலந்தகுட்டை , தட்டாங் குட்டை, காடசநல்லூர் ஆகிய ஐந்து ஊராட்சிகளும், ஆலம்பாளையம் பேரூராட்சி உடன் ஓடப்பள்ளி அக்ரஹாரம், புதுப்பாளையம் அக்ரஹாரம் ஆகிய இரண்டு ஊராட்சிகளும் இணைக்கப்படுகின்றன. இதனால் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் கொக்கராயன் பேட்டை, பாப்பம்பாளையம், பாதரை, சவுதாபுரம், பள்ளக்கா பாளையம், குப்பாண்டபாளையம், கலியனூர், கலியனூர் அக்ரஹாரம் ஆகிய எட்டு ஊராட்சிகள் மட்டுமே செயல்படும் என தெரியவந்துள்ளது. குப்பாண்டபாளையம் ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளிலும் முதல் 10 வார்டுகள் குமராபாளையம் நகராட்சியுடன் இணைக்கப்படுகிறது. இதனால் மீதமுள்ள இரண்டு வார்டுகளை ஆறு வார்டுகளாக வரையறை செய்து குப்பாண்டபாளையம் ஊராட்சியாக செயல்படும் என அறிவிப்பு (குறிப்பு ) சமயசங்கிளி அக்ரஹாரம் ஊராட்சி இடையில் களிணூர் அக்ரஹாரம் உள்ளது ஆலப்பாளையம் பேரூராட்சி சமயசங்கிளி அக்ரஹாரம் ஊராட்சி ஒரு பகுதியாகவும் மற்றோரு பகுதியில் களிணூர் ஊராட்சி செயல்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை