அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தலைமையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நினைவு அஞ்சலி மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

Logesh 9 months ago

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் மலர்வளையங்கள் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், “குடும்ப ஆட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களைக் காப்பாற்ற எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பயணிப்போம்.” என்று எடப்பாடி முன்மொழிய அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37-வது நினைவு நாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுக தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதில்,அராஜகத்தின் அடையாளம், திமுக-வை வீழ்த்துகின்ற தெய்வ சக்தியாய் எம்ஜிஆர் திகழ்ந்தார். அவர்வழி நின்றே, நேர்வழி சென்றால், நாமும் எதிரிகள், துரோகிகளை வீழ்த்துவோம்.பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, வஞ்சக மனம் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிய திமுக-வை, வேரோடும், வேரடி மண்ணோடும், வீழ்த்திட உறுதி ஏற்கிறோம்


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்