இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68-ஆம் ஆண்டு நினைவுநாள் லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் அவர்கள் தலைமையில் நினைவு அஞ்சலி செலுத்தினர்

லோக் ஜனசக்தி கட்சி சார்பில் அம்பேத்கர் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..! புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68வது நினைவுநாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அம்பேத்கார் சிலைக்கு பல்வேறு கட்சியை சார்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் திருச்செங்கோடு செல்லும் சாலையில் லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் அம்பேத்கார் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீர மரியாதை செய்தனர்.இந்நிகழ்வில் லோக் ஜனசக்தி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தலைமை ஏற்றார்,நாமக்கல் மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார், தலைமை பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் பாலு, சிறுபான்மையினர் அணி மாவட்டத் தலைவர் அக்கீம், பெரியார் திராவிட விடுதலை கழகம் மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, மற்றும் பொதுமக்கள் நிகழ்வில் கலந்து கொண்டு அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர் .