வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு: மின்சார தேவை 44 கோடி யூனிட்டாக அதிகரிப்பு

LOGESH 1 year ago

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் இருந்த மின்சார நுகர்வுடன் ஒப்பிடும்போது கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் கோடை காலம் தொடங்கும் நேரத்தில் அதிகப்படியான மின்சார நுகர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடந்த ஆண்டின் அதிகபட்ச மின்சார நுகர்வை கடந்த மார்ச் 30-ந்தேதி 42 கோடி யூனிட் என்ற அளவை எட்டியது. இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி 44 கோடி யூனிட் மின்சார நுகர்வு இருந்ததாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது,

'தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சார நுகர்வு 44 கோடி யூனிட்டுகளை தொட்டுள்ளது. இதுதான் தமிழ்நாட்டில் பதிவான மிக அதிக மின்சார நுகர்வு. முந்தைய காலங்களில் அதிகபட்சமாக மார்ச் 29-ந்தேதி ஒட்டுமொத்த மின்சார நுகர்வு 42 கோடி யூனிட்டாகும். இதன் மூலம் முந்தைய சாதனையை தமிழ்நாடு முறியடித்தது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி இருந்த 42 கோடி யூனிட் என்ற உச்ச பயன்பாட்டை விட 63.4 லட்சம் யூனிட்டுகள் அதிகம். கோடைகாலம் என்பதால் மின்சார பயன்பாடு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. அரசுக்கு சொந்தமான மின்சார பயன்பாட்டு நிறுவனம் இன்னும் கூடுதல் மின்சார தேவை வரும் நாட்களில் ஏற்படலாம் என்று கணித்துள்ளது.




செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்