சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் டாக்டர் தொல் திருமாவளவன்அவர்களின் தொகுப்பு

Admin 1 year ago

கடலூர்: திமுக கூட்டணியில், சிதம்பரம் (தனி) தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில், தற்போது மக்களவை உறுப்பினராக உள்ள தொல்.திருமாவளவன் (61) மீண்டும் போட்டியிடுகிறார். திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை குற்றவியல் பயின்றவர். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.திருமணம் செய்து கொள்ளவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி, தமிழக அரசியல் களத்தில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகிறார். இவர், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 5 முறை போட்டியிட்டு, இரு முறை வெற்றி பெற்றுள்ளார். சிறுத்தைகள் என்னும் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய அ. மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்டபோது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அந்த அமைப்பின் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் எனப் பெயர் மாற்றிய திருமாவளவன் நீலம் மற்றும் சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்து 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் மதுரையில் அக்கொடியை ஏற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்தபோது 1999 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் தொல். திருமாவளவன் தனது அரசுப் பணியைத் துறந்தார். இவர் 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியிலிருந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2014 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், இதே சிதம்பரம் தொகுதியில்,திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளரான சந்திரகாசியிடம் தோல்வியடைந்தார். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்