சந்திரகிரகணம் 2023: சென்னையில் கிரகணம் எப்போது தெரியும்? எங்கெல்லாம் தெரியாது?

LOGI 1 year ago

சென்னை: இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணத்தை சென்னையில் எந்த நேரத்தில் பார்க்க முடியும் தெரியுமா? 2023 ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் மே 5 ஆம் தேதி சித்ரா பவுர்ணமி அன்று வந்தது. அது பகுதி சந்திரகிரகணமாக இருந்தது. சந்திரகிரகணம் பவுர்மணி நாட்களிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாட்களிலும் நடைபெறும். ஆண்டுக்கு மொத்தம் 4 கிரகணம் நடைபெறும். அதில் இரு சந்திரகிரகணங்களும் இரு சூரிய கிரகணங்களும் நிகழும். அதில் கடைசி சந்திரகிரகணம் இன்று மற்றும் நாளை நிகழ்கிறது. இன்று நள்ளிரவில் சந்திரன் பூமியின் நிழல் பகுதிக்கு வருகிறது. இந்த சந்திரகிரகணத்தை இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய நேரப்படி இந்தியாவில் சந்திர கிரகணம் அக்டோபர் 29ஆம் தேதி நள்ளிரவு 1.06 மணி முதல் 2.22 மணி வரை இருக்கும். கிரகண் 1 மணி 19 நிமிடங்கள் நிகழும் என கணக்கிடப்பட்டுள்ளது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே பூமி வருவதுதான் சந்திரகிரகணம் ஆகும். கிரகண நேரத்தில் கோயில்கள் அனைத்தும் மூடப்படும். ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளிலும் இந்த கிரகணம் தெரியும். டெல்லியில் அக்டோபர் 29ஆம் தேதி இரவு 1.06 மணிக்கு தொடங்கி 2.22 மணிக்கு முடியும். உத்தரப்பிரதேசத்திலும் அதே நேரம்தான். அது போல் அஸ்ஸாம், பெங்களூர், மும்பை, ஹைதராபாத், இந்தூர், சென்னை, லக்னோ, பாட்னா, மத்திய பிரதேசம் ஆகிய ஊர்களில் சந்திரகிரகணம் தெரியும். அமெரிக்காவில் சந்திரகிரகணம் தெரியாது. எனினும் தென் அமெரிக்காவின் பிரேசிலில் உள்ள சில பகுதிகளில் சந்திரகிரகணம் தெரியும்.



செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்