தமிழக மக்கள் கழகம் தலைவர் கானகம்.மு.சீனிவாசன் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் அஇஅதிமுக வுக்கு ஆதரவு : எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தனர்

Admin 1 year ago

தமிழக மக்கள் கழகம் தலைவர் சமூக சேவகர் காகனம் சீனிவாசன் அவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அனைத்து மாநில மாவட்ட செயற்குழு உறுப்பினர் ,பொதுக்குழு உறுப்பினர் அனைவரும் கலந்து ஆலோசித்து சென்ற மாதம் கூட்டம் நடைபெற்றது. இத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதன்படி நாடாளுமன்ற தேர்தலில் அஇஅதிமுக நாற்பது தொகுதலில் வெற்றி பெற தமிழக மக்கள் கழகத்தில்  உள்ள நிர்வாகிகள்,தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்டத்தின் நிர்வாகிகள் வேட்பாளர்களுக்கு துணை நின்று மக்களின் செல்வாக்கு மிக்க நமது தலைவர் அவர்கள் மாவட்ட முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற உறுதுணையாக இருப்பார். மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் தனியாக நின்று நாற்பது என்று வெற்றி கனியை அடைந்தார். அதே போல் இந்த தேர்தலில் அஇஅதிமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் .மக்களின் செல்வாக்கு மிக்க கட்சி மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் ,தொட்டில் குழந்தை திட்டம், தண்ணீர்,உணவகம் முதல் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு,உப்பு, படித்த பெண்கள் வேலையில் முன்னுரிமை, இரண்டு சக்கர வாகனம்,மருத்துவ உதவி,முழு உடல் பரிசோதனை திட்டம் போன்ற எண்ணற்ற திட்டம் கொண்டு வந்த கட்சி அஇஅதிமுக . எனவே  வரும் நாடாளுமன்ற தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற உறுதுணையாக இருப்போம்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்