திராவிட விடுதலைக் கழகம் முத்துப் பாண்டி அவர்களின் தலைமையில் தந்தை பெரியார் அவர்களுக்கு பள்ளி பாளையத்தில் சிலை அமைப்பது தொடர்பாக *அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

LOGI 1 year ago

29 /9/23 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி அளவில் பள்ளிபாளையம் பெரியார் நகரில் உள்ள திராவிடர் விடுதலைக் கழகத்தின் அலுவலகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி அவர்களின் தலைமையில் கூட்டம் கூட்டப்பட்டது .இந்தக் கூட்டத்தில் தந்தை பெரியார்க்கு சிலை வைப்பதற்கு ஆவரங்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் அல்லது  ஒட்டு மொத்த  அருகில் அல்லது புதன் சந்தை அருகில் ஏதாவது ஒரு இடத்தில் சிலை வைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் மற்றும் நகர் மன்ற தலைவர் மற்றும்  நகர் மன்ற துணைத் தலைவர் ஆகியோருக்கு மனு கொடுப்பது எனவும் இந்த கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது மேலும் இந்த கூட்டமைப்புக்கு சமூக நீதி கூட்டமைப்பு என பெயர் வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும்

 3 /10 /2023 செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணி அளவில் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு மனுவை கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில்

*பங்கேற்ற அமைப்புகள் 

மறுமலர்ச்சி திமுக புரட்சிகர

இளைஞர்முன்னணி 

சமூக ஆர்வலர்கள்

லோக் ஜனசக்தி கட்சி ஆல் இந்தியா கிஷன் சங்கம் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதித்தமிழர் பேரவை இடதுசாரி சிந்தனையாளர் நடுவோம் தமிழ் புலிகள் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சிபிஎம்

 சிபிஐ எம் எல் 

மற்றும் திராவிடர் கழகம்  கம்யூனிஸ்ட் கட்சி  மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டனர்.



செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்