போதை பொருள் புழக்கத்தை கண்டித்து மார்ச் 4-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Admin 1 year ago

சென்னை: போதை பொருட்களின் புழக்கத்தை கண்டித்தும், திமுகவுக்கு எதிராகவும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 4-ம் தேதி நடைபெற இருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திமுக அரசு அமைந்த கடந்த 32 மாத காலத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் போதை பொருட்களை புழக்கத்தில் விடுகின்ற கும்பலை அந்நாட்டு காவல்துறை தேடி வந்த நிலையில், அவர்கள் இந்தியாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லியில், சிறப்பு போலீஸ் அமைப்புடன் நடத்திய சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதுமட்டுமின்றி இவர்களின் தலைவனாக செயல்பட்டவர் சென்னை மேற்கு மாவட்ட திமுகஅயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக் என்ற செய்திதமிழக மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்துக்கு தலைகுனிவு: அரசியல் பின்புலத்தை வைத்துக்கொண்டு ஜாபர் சாதிக் போதைபொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது தமிழகத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவாகும். இவ்வாறு தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து அதிமுகவின் இளைஞர் பாசறை, பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர்அணி ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில் வரும் 4-ம் தேதி காலை10 மணிக்கு வருவாய் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்