ஆன்மீக புரட்சி செய்த பங்காரு அடிகளாருக்கு தமிழ்நாடு புரட்சித்தாய் சின்னம்மா பேரவை சார்பாக இரங்கல் அறிவிப்பு :

LOGI 1 year ago

நாமக்கல் :மாநில செயலாளர் ஆறுமுகம் அவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி  பங்காரு அடிகளார் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி அரை நூற்றாண்டுக்கும் மேலாக மிக சிறப்பாக நடத்தி கல்வி,மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார்.ஆதிபராசக்தி ஆலயத்தில் கருவறைக்குள் சென்று பெண்கள் வழிபாடு நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார்.கோவில் கருவறைக்குள் அனைத்து சமுதாய மக்களும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நடைமுறைப்படுத்தனார்.பங்காரு அடிகளார் அவர்களின் ஆன்மீக புரட்சி மிகவும் மதித்து போற்ற தக்கது.ஆன்மீக மற்றும் சமூக சேவையை பாராட்டி ஒன்றிய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.அவர் தற்போது மறைவுற்றிருப்பது அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும்.பங்காரு அடிகளாரை இழந்துகு வாடும் அவரது பக்தர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும்  எனது ஆழ்ந்த இறங்களையும்  ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறோம் .


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்