வெற்று வாக்குறுதி அளிக்கும் பாரதிய ஜனதா கட்சி ,:பிரியங்கா காந்தி சாடல்

ஜெய்ப்பூர்: பா.ஜ.,வினர் வெற்று வாக்குறுதிகளை மட்டும் வழங்குகின்றனர் என காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார். ராஜஸ்தான் சட்டசபைக்கு நவ.,25ல் தேர்தல் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது: மத்திய அரசு இரண்டு தொழிலதிபர்களுக்கு மட்டும் ஆதரவு அளிக்கிறது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை அவர்களுக்கே வழங்குகின்றனர். பொது மக்களின் குரலை கேட்க மத்திய அரசு மறுக்கிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. கொள்கை, எதிர்கால திட்டங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. பாஜ தலைமையிலான மத்திய அரசு மக்களை அடக்க நினைக்கிறது. அதிகாரத்தில் இருக்கவும், அவர்களின் எதிர்காலத்தை மட்டும் பா.ஜ., நினைக்கிறது. பிரதமர் மோடி பெண்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசுகிறார். ஆனால், அது 10 ஆண்டுகளுக்கு பிறகு அமல்படுத்தப்படும். பெண்களுக்கு இட ஒதுக்கீடு என சொல்லிவிட்டு 10 ஆண்டுக்கு பிறகு, அச்சட்டத்தை அமல்படுத்துகின்றனர். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பேச மறுக்கின்றனர். அவர்கள் அளிப்பது அனைத்தும் வெற்று வாக்குறுதிகள். ஆனால், காங்கிரஸ் அளிக்கும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுகின்றன. தேர்தல் நேரத்தில் மதம் மற்றும் ஜாதி குறித்து பேசினால் ஓட்டு கிடைத்துவிடும் என்பதை அக்கட்சி புரிந்து வைத்துள்ளது. இவ்வாறு பிரியங்கா பேசினார்.