ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் : ரூ.10 கோடி வர்த்தகம் பாதிப்பு...

LOGI 1 year ago

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க கோரி 10ம் நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்  செய்வதால் ரூ.10 கோடிக்கு மீன் வர்த்தகம் பாதித்துள்ளது. அக்., 14ல் ராமேஸ்வரம், மண்டபம் சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம், வவுனியா சிறையில் அடைத்தனர். இவர்களை விடுவிக்க கோரி அக்., 16 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதில் 100க்கு குறைவான சிறிய ரக படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீதமுள்ள 600 படகின் மீனவர்கள் நேற்றுடன் 10ம் நாளாக வேலை நிறுத்தம் செய்வதால், கடற்கரையில் லேத், பட்டறைகள், ஐஸ் பேக்கரிகள் மூடப்பட்டு மீனவர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. இந்த 10 நாளில் 5 தடவை மீனவர்கள் மீன்பிடிப்பார்கள். இதன்மூலம் ஒருமுறைக்கு சராசரி ரூ. 2 கோடி வீதம் ரூ.10 கோடிக்கு மீன் வர்த்தகம் பாதித்தது. மேலும் மீனவர்களுக்கு வருமானம் இன்றி வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலை நீடித்தால் குடும்ப செலவுக்கு கடன் வாங்கி சூழல் ஏற்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்