வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற கூடும்!- வானிலை மையம்

LOGI 1 year ago

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறக்கூடுமென இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தற்போது மேற்கு வங்கத்தின் டிக்காவுக்கு தெற்கே 410 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமானது, மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, வருகிற 25ஆம் தேதி மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே வங்கதேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்