தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம் தகவல்
LOGESH
1 year ago

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசான மழையும் பெய்து வருகிறது. இதனிடையே வானிலை மையம் சார்பில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 9 மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளையும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.