திருப்பத்தூர் :அக்டோபர் 24 அன்று சுதந்திர போராட்ட வீரர் மருது சகோதரர்களுக்கு மக்கள் செல்வர் டிடிவி தினகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்

சிவகங்கை
சீமையில் சீறி எழுந்து வீரப்போர் புரிந்த தியாக தீபங்களாம் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள். திருப்பத்தூரில் அமைந்துள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மரியாதை செலுத்த இருக்கிறார். அ.ம.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக அடிமை விலங்கொடித்து, தாய்மண் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க, சிவகங்கை சீமையில் சீறி எழுந்து வீரப்போர் புரிந்த தியாக தீபங்களாம், மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவுநாளான 24.10.2023 செவ்வாய் கிழமையன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மணியளவில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மரியாதை செலுத்த இருக்கிறார்.