மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு :எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்ய நினைக்கும் பா.ஜ...

LOGI 1 year ago

கோல்கட்டா: 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குள் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் கைது செய்ய பாஜ., சதி செய்கிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.  இது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய பாஜ., வேலை செய்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்களின் போன்கள் ஹேக் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள்.  எதிர்க்கட்சி தலைவர்களை ஊழலுக்கு எதிராக வாய் திறக்கவிடமால் பா.ஜ., முயற்சி செய்கிறது. 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குள் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் கைது செய்ய பாஜ., சதி செய்கிறது. இவ்வாறு மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.


 


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்