தமிழ்நாடு அரசு நிரந்தர தடை :தமிழ்நாட்டில் 'மாஞ்சா நூலை' இனி கண்ணிலேயே பார்க்கக் கூடாது என்று அறிவிப்பு
LOGI
1 year ago

சென்னை: மாஞ்சா நூல் தயாரிப்பு, விற்பனை,இறக்குமதி உள்ளிட்டவைகளுக்கு தமிழக அரசு நிரந்தர தடை விதித்துள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் துறை செயலாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு; ''நைலான், பிளாஸ்டிக் அல்லது செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் என பிரபலமாக அறியப்படும் மக்கும் தன்மையற்ற காற்றாடி நூலை தயாரித்தல் விற்பனை செய்தல், சேமித்தல், கொள்முதல் செய்தல், இறக்குமதி செய்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு அரசு முழுமையான தடை விதித்துள்ளது. இது தொடர்பாக, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதியிட்ட அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. ''