தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு மின் அலுவலகங்கள் முன்பு நவ.2-ல் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

LOGI 1 year ago

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், மின் வாரியத்தின் பிரச்சினைகள் தொடர்பாக நவ.2-ம் தேதி காலை பிரிவு அலுவலகங்களில் ஒலி முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது, மாலையில் வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தை மூன்றாக பிரிப்பதை கை விட வேண்டும். ஒப்பந்த நிறுவனம் மூலம் ஊழியர்கள் நியமிப்பதை கைவிட வேண்டும். ஊதிய உயர்வு நிலுவை தொகையை வழங்க வேண்டும். கடந்த 2019 டிச.1-ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட சலுகைகளை ரத்து செய்வதற்கான மின் வாரிய ஆணை 2-ஐ ரத்து செய்ய வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் நிலுவையில் உள்ள படித் தொகைக்காக அமைக்கப்பட்ட குழு பேச்சு வார்த்தையை உடனே தொடங்க வேண்டும்’ ஆகிய 6 கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. 14 மின் வாரிய தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்