பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது குரு பூஜையில் கலந்து கொள்ளும் கழக நிர்வாகிகள்:கானகம்.சீனிவாசன்

LOGI 1 year ago

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்  1933-ஆம் ஆண்டு முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள சாயல்குடி என்ற கிராமத்தில் சேதுராமன் செட்டியார் என்பவர் சுவாமி விவேகானந்தர் பெயரில் ஒரு வாசகசாலை திறந்தார். அந்த விழாவில் விவேகானந்தர் படத்தைத் திறந்து பேச அழைக்கப்பட்டிருந்த மதுரை கிருஷ்ணசுவாமி பாரதி வரவில்லை. அப்போது தேவர் சாயல்குடி அருகேயுள்ள எஸ். இலந்தைகுளம் என்ற கிராமத்திற்கு ஒரு பஞ்சாயத்திற்காக வந்திருந்தார். இதையறிந்த சேதுராமன் செட்டியார் அங்குச் சென்று தேவரை அழைத்து விழாவில் கலந்துகொண்டு பேச அழைத்தார். அதுவரை எந்தவொரு மேடையிலும் பேசியிராத தேவர், விவேகானந்தரின் தத்துவங்களைப் பற்றி 3 மணிநேரம் பேசினார். அவரது சொற்பொழிவு அனைவரையும் கட்டிப்போட்டது. பின்னாளில் முதல்வரான காமராஜரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேவரின் பேச்சைக் கேட்டார். தேவரைப் போலப் பேசக் கூடியவர்களின் சேவை காங்கிரஸ் கட்சிக்குத் தேவை என்று அவர் கருதினார்.



செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்