எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேவர் குரு பூஜை விழாவில் என்ன நடந்தாலும் கலந்து கொள்ள வேண்டும் என்று உறுதி:ரத்தத்தில் லெட்டர் தந்த உதயகுமார்

தேவர் குரு பூஜை விழாவில் என்ன நடந்தாலும் கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறாராம். நாளை, 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது குரு பூஜை பசும்பொன்னில் நடக்க உள்ளது. இந்த விழாவிற்கு தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் நாளை கலந்துகொள்ள உள்ளார். இன்னொரு பக்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த மாதம் 30ம் தேதி பசும்பொன்னிற்கு செல்ல உள்ளார். தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் பசும்பொன்னிற்கு செல்ல உள்ளார். இது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
எச்சரிக்கை: இவரின் வருகைக்கு பல்வேறு முக்குலத்தோர் அமைப்புகள், தேவர் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு, எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. இது தொடர்பாக சசிகலா ஆதவாளர் தேனி கர்ணன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், யார் வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் எடப்பாடி வர வேண்டாம். எடப்பாடி மட்டும் இங்கே வரவே கூடாது. அவர் எங்களுக்கு வேண்டாம் என்று நினைக்கின்றனர். அவர் துரோகம் செய்தவர். துரோகி ஒருவர் இங்கே வரக்கூடாது என்று நினைக்கின்றனர். அங்கே இருக்கும் மக்கள் எல்லோரும் இதைத்தான் நினைக்கின்றனர். வந்தால் பிரச்சனை வரும். அவருக்கு இங்கே வேலையே இல்லை. நீங்கள் அசிங்கப்பட்டு போவீர்கள் என்று அறிக்கை வெளியிடுகிறார்கள் பல தென்னக தலைவர்கள். அவர் நயவஞ்சகர். அவர் வந்தால் பெண்கள் தாக்குவார்கள் .. சிலர் செருப்பை வீசலாம்.. சிலர் விளக்கமாற்றை வீசலாம். அது பெரிய அசிங்கம். அது பெரிதாக திரும்பும். அதிமுக பொதுச்செயலாளர் என்று சொல்லிக்கொண்டு அவர் வர கூடாது. போலீஸ் துணை வந்தால் கூட தாக்குதல் நடக்கும். குரு பூஜை நடக்கும் கோவிலுக்கு.. சந்நிதிக்கு அவர் செல்ல முடியாது. அப்படி செல்ல முயன்றால் அவருக்கு அசிங்கம்தான் ஏற்படும். எதிர்க்கட்சி தலைவருக்கு அடி விழுந்தால் அவருக்கு அசிங்கம். குரு பூஜை நடக்கும் கோவிலுக்கு.. சந்நிதிக்கு அவர் செல்ல முடியாது. அப்படி செல்ல முயன்றால் அவருக்கு அசிங்கம்தான் ஏற்படும். எதிர்க்கட்சி தலைவருக்கு அடி விழுந்தால் அவருக்கு அசிங்கம். தமிழ்நாட்டிற்கும் அசிங்கம். அதை ஏற்றுக்கொள்ள எடப்பாடி தயாராக இருக்க வேண்டும். அவரை முக்குலத்தோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர், என்று கூறியுள்ளார். எடப்பாடிக்கு போன் அழைப்பு: இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவிற்கு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ரத்தத்தால் கையெழுத்திட்டு வரவேற்கும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார் ஆர்.பி. உதயகுமார். செண்டிமெண்ட் ரீதியாக முக்குலத்தோர் பிரிவினர் இடையே இது போன்ற கடிதங்கள் அதிக முக்கியத்துவம் பெறும். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் புரட்சி பார்வர்ட் பிளாக் ஆண்டித்தேவர் பிரிவு தலைவர் முத்துராமன், முக்குலத்தோர் உறவின்முறை சங்கம் மறத்தமிழர் சேனை ஆதிமுத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள், அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை கண்ணன் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு அகமுடையார் மக்கள் தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்து அவருக்கு அழைப்பும் விடுத்துள்ளனர். வேட்டியை மடித்துக்கட்டும் எடப்பாடி: இந்த நிலையில்தான் தேவர் குரு பூஜை விழாவில் என்ன நடந்தாலும் கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறாராம். இதற்காக அவர் 5000 பேரை கொங்கு , வடக்கு மண்டலத்தில் இருந்தும் இறக்க உள்ளாராம். தனக்கு பாதுகாப்பாக தன்னை சுற்றி இருக்குமாறு 5000 பேரை கொண்டு வர தனக்கு நெருக்கமான மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம். குரு பூஜை விழாவில் என்ன நடந்தாலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற முடிவை எடப்பாடி எடுத்ததே இதற்கு காரணம் என்கிறார்கள்.